அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் பிரச்சாரம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சிஅதிமுக கூட்டணியாக பாஜக,பாமக கட்சிகளை வைத்துள்ளது.மேலும் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து தேர்தலை சந்திக்கின்றன.

அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் அவர் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தப்படி அவர் மதுரை மாவட்டத்தில் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் போன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறினார் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். உதவித் தொகை அதிகமாக வழங்கப்படும் வேண்டும் .நிலம் வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் அவர் அதிமுக தேர்தல் அறிக்கையை பட்டியலிட்டு பிரச்சாரத்தில் கூறினார்.