பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அதிமுக என்று கூறும் துணை முதல்வர்!

அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் மூன்றாம் முறையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறும் ஓபிஎஸ்!
 
பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அதிமுக என்று கூறும் துணை முதல்வர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற சில தினங்களே உள்ளதால் தமிழகத்தில் பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

admk

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவுடன் பாஜக பாமக கட்சிகளை கூட்டணி  வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து அத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மேலும் அவர் தமிழகத்தின் பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறினார், அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் மூன்றாம் முறையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

From around the web