சட்ட மாமேதை க்கு மரியாதை செலுத்தினார் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் !

தேனி கோட்டூரில் அம்பேத்கர் சிலைக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!
 
சட்ட மாமேதை க்கு மரியாதை செலுத்தினார் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் !

இந்தியா சுதந்திரம் அடைந்து அடைந்தது 1947 ஆம் ஆண்டு. அதன் பின்னர் மூன்று வருடங்கள் பின் 1950 ஆம் ஆண்டு இந்தியா ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. மேலும் குடியரசு இந்தியாவில் முதல் குடிமகனாக ராஜேந்திர பிரசாத் இருந்தார்.இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் மக்கள் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் ஒடுக்கப்பட்டனர். மேலும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஈவேரா இருந்தார். மேலும் அவர் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார்.

ambedkar

இந்திய அரசியலமைப்பின் தந்தை மற்றும் அரசியலமைப்பில் வகுத்தவர் என்று அழைக்கப்படுபவர் டாக்டர் அம்பேத்கார் .ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளான இன்றைய தினம் தமிழகத்தில் பல தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி டுவிட் செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் துணை முதல்வராக இருப்பவர் ஓ பன்னீர்செல்வம். அவர் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சட்டமன்றத் தேர்தலும் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தின் இன்றைய தினம் புத்தாண்டு தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web