காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கிறது!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கிறது!
 
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கிறது!

கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு மே மாதம் தான். மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் ஆனது தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தின் வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன்னால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருமாறியுள்ளது.

sun

மேலும் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வெப்பநிலையானது 4 முதல் 6 செல்சியஸ் டிகிரி அதிகரிக்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தமிழகத்தில் தேர்தல் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளதால் வெப்ப நிலை உயர்ந்தது மக்களுக்கு மிகவும் எரிச்சலையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது ஆகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் எண்ணூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

From around the web