வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: எந்தெந்த மாநிலங்கள் பாதிக்கலாம்?

 
niver cyclone

வங்கக்கடலில் இன்னும் ஒரு சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகலாம் என்றும் அதனை அடுத்து புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாக தெரிவித்து வந்தது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி விட்டதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு வட மேற்கு வங்க கடலில் உருவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

இதன் காரணமாக தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காற்றழுத்த தாழ்வு வலுவாகி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்றும் தமிழகத்திலும் ஓரளவுக்கு மழை இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

From around the web