ஐஏஎஸ் அதிகாரியால் மன உளைச்சல்: வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டு அரசு டாக்டர்!

கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மன உளைச்சலுக்கு ஆளான அரசு டாக்டர் தனது வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மன உளைச்சலுக்கு ஆளான அரசு டாக்டர் தனது வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கர்நாடக மாநிலம் பெல்லாரி என்ற பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரநாத். இவர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா சிறப்பு தினமும் பணியாற்றும்படி அவரது மேலதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு டாக்டர் ரவீந்திரநாத் மறுத்துள்ளார்.

இதனையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த நிலையில் கட்டாய விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய மறு நாள் மீண்டும் அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவீந்திரநாத் தனது வேலையை ராஜினாமா செய்தார். தான் பணியை ராஜினாமா செய்ய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்/ இந்த நிலையில் வேலையை விட்ட டாக்டர் ரவீந்திரநாத் தனது சொந்த கிராமத்திற்கு வந்து அங்கு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் 

இதுகுறித்து அவர் தனது ஆட்டோவில் விவரமாக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட தான் தற்போது ஆட்டோ ஓட்டி வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து அரசு விசாரணை செய்து வருகிறது

From around the web