கிளம்பியது எதிர்ப்பலை: இறந்தவர்களின் புகைப்படத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்தனர் போராட்டக்காரர்கள்!
 
கிளம்பியது எதிர்ப்பலை: இறந்தவர்களின் புகைப்படத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தற்போது சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான ஒரு தீர்மானம் அனைத்து கட்சிகளும் நிறைவேற்றப்பட்டதாக கூறபடுகிறது. அதன்படி தமிழகத்தில் சில தினங்களாக மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்திக்கான பணியினை நான்கு மாதத்திற்கு முடிவு செய்துள்ளதாகவும் அனைத்து கட்சிகள் சார்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது.sterlite

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம்தூத்துக்குடியில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தன. அதன்படி இன்றைய தினம் பண்டாரம் பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு பல பகுதிகளில் பேன் ஸ்டெர்லைட் என்றும் வாசகங்கள் எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனோடு போராட்டக்காரர்கள் பலரும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது அவர்கள் அந்த புகைப்படத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கண்டனம்  விட்டனர். இதனால் அப்பகுதியில் மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அலைகள் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web