ஊர் சுற்றும் கொரோனா: 111 நாடுகளில் பரவிய டெல்டா!

 
delta+

கொரோனா இரண்டாவது அலை தற்போது முடிவடையவுள்ள நிலையில் விரைவில் மூன்றாவது அலை பரவும் என்று மருத்துவர்கள் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உருமாறி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பல வகைகளில் பரவிவருகிறது என்றும், அவற்றில் டெல்டா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள அனைவருமே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது 111 நாடுகளில் காணப்படும் இந்த டெல்டா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

From around the web