தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா உறுதி!

தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
 
delta +

தற்போது மக்களிடையே சில தினங்களாக அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தை என்றால் அதனை கொரோனா வைரஸ் என்றே கூறலாம். அதன்படி இந்த வைரசின் தாக்கம் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் வரத் தொடங்கியது இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக இந்த நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்து மக்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. இருப்பினும் இந்த ஆண்டும்  இந்த கொரோனாவை தற்போது இந்திய அரசானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்றே கூறலாம்.delta +

இதன் விளைவாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் கொரோனா  பாதிப்பில்லாத மாநிலமாகவும் காணப்படுகிறது. நம் தமிழகத்தில் தற்போது படிப்படியாக இந்த நோய் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் தற்போது டெல்டா பிளஸ் கொரோனா  புதிய நோய் பரவத் தொடங்குகிறது. முன்னதாக இந்தியாவில் 40 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியபிரதேசம் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் டெல்டா பிளஸ் கொரோனா  காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நோய்  நம் தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் காலையில் இந்த நோயானது தமிழகத்தில் மூன்று பேருக்கு உறுதியான நிலையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது .மேலும் 45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 48 பேருக்கு இதுவரை உறுதியாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிராவில் 20 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் ஏழு பேருக்கும் இந்த குரான் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

From around the web