"டெல்டா ப்ளஸ் கொரோனா பரவும் தன்மையுடையவை!" மத்திய அரசு கடிதம்;

தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிரடி மற்றும் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது
 
delta +

தற்போது நம் மக்களிடையே அதிகமாக பேசப்படும் வார்த்தை என்றால் அதை கொரோனா என்றே சொல்லலாம். அந்த படி கொரோனா  தாக்கமானது கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக வரத் தொடங்கியது அவை கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்தியா கட்டுப்படுத்தியது. இருப்பினும் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இந்த கொரோனா சில மாதங்களாக இந்தியாவில் வலம் வந்தன. இருப்பினும் இந்திய அரசின் பெரும் முயற்சியினால் இந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டன.goi

இந்நிலையில் தற்போது இந்த கொரோனாவின் மூன்றாவது வகை வேகமாக பரவும் நிலையில் காணப்படுகிறது, டெல்டா ப்ளஸ் கொரோனா  என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா கேரளாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர்  தமிழகத்தில் சென்னையில் உள்ள ஒரு நபருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா  கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேற்றைய நாள் முடிவில் தமிழகத்தில் 9 பேருக்கு இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் இந்த டெல்டா ப்ளஸ் கொரோனாவானது மதுரை காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் காணப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் இந்த டெல்டா ப்ளஸ் கொரோனாவானது வேகமாக பரவும் தன்மை உடையதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

From around the web