டெல்லி டூ பெங்களூரு.. தனியாளாக விமானத்தில் பயணித்த 5 வயது சிறுவன்!!

இந்தியாவில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கிய ஊரடங்கு நான்கு கட்டங்களாக மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினைக் கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு பலவிதமான பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளத்தைத் தவிர்த்து உள்நாட்டு விமான சேவை இந்தியாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலுடன் பலவிதமான முன் எச்சரிக்கை
 
டெல்லி டூ பெங்களூரு.. தனியாளாக விமானத்தில் பயணித்த 5 வயது சிறுவன்!!

இந்தியாவில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கிய ஊரடங்கு நான்கு கட்டங்களாக மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினைக் கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு பலவிதமான பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளத்தைத் தவிர்த்து உள்நாட்டு விமான சேவை இந்தியாவில் நேற்று முன் தினம்  தொடங்கியது. உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலுடன் பலவிதமான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விமான சேவை துவங்கப்பட்டது.

டெல்லி டூ பெங்களூரு.. தனியாளாக விமானத்தில் பயணித்த 5 வயது சிறுவன்!!

இந்தநிலையில் நேற்று 5 வயது சிறுவன் ஒருவன் டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு தனியாக விமானத்தில் பயணம் செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தினைக் கொடுத்துள்ளது.

பெங்களூருவில் தாய், தந்தையுடன் வசித்துவந்த விகான் சர்மா, பள்ளி விடுமுறையின் காரணமாக டெல்லியில் உள்ள பாட்டி வீட்டிற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தாய், தந்தையுடன் சென்றுள்ளான். அங்கே மகனை விட்டுவிட்டு பணிக்குப் பெற்றோர் திரும்பிய நிலையில், ஊரடங்கால் அதன்பின்னர் விகான் பெங்களூரு திரும்ப முடியாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தாத்தா மற்றும் பாட்டி இருவரும் டெல்லியில் இவரை வழியனுப்ப, பெங்களூரு தனியாக வந்து அடைந்துள்ளான் விகான்.

5 வயது சிறுவன் தனியாக பயணித்த விஷயம் மீடியாக்கள் மூலம் தெரியவர, சிறுவனுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

From around the web