அம்மாவை பார்க்க சென்ற பத்திரிகையாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

டெல்லியில் முன்னணி பத்திரிக்கை ஒன்று பத்திரிகையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த 26 வயது வாலிபர் ஒருவர் தனது அம்மாவைப் பார்க்கச் சென்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுஇது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்: டெல்லியில் பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மனதில் தோன்றியது. உடனே நான் டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள என் அம்மாவை பார்க்க ரயிலில்
 

அம்மாவை பார்க்க சென்ற பத்திரிகையாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

டெல்லியில் முன்னணி பத்திரிக்கை ஒன்று பத்திரிகையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த 26 வயது வாலிபர் ஒருவர் தனது அம்மாவைப் பார்க்கச் சென்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்: டெல்லியில் பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மனதில் தோன்றியது. உடனே நான் டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள என் அம்மாவை பார்க்க ரயிலில் சென்றேன்.

ஜம்முவில் போய் இறங்கியதும் எனக்கு கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதன் பிறகு எனக்கு மூன்று நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம். இந்த நிலையில் திடீரென எனக்கு பாசிட்டிவ் என்ற ரிசல்ட் பேரதிர்ச்சியாக இருந்தது
முடிந்தவரை அம்மாவிடம் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் செய்தி மிக வேகமாக பரவி என் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது

கொரோனா வார்டில் நான் இருந்தபோது என் அம்மாவிடமிருந்து அழுகையுடன் கூடிய ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் நான் இந்த கொரோனாவை மன உறுதியுடன் எதிர்கொண்டேன்

மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி நடந்து கொண்டேன். சரியான சிகிச்சை மற்றும் மன உறுதியால் தற்போது எனக்கு கொரோனா இல்லை. நான் மீண்டும் என் அம்மாவை சந்திக்க செல்கிறேன். கொரோனாவை வெல்வது மிக எளிமை. மன உறுதி தான் முக்கியம்’ என்று அந்த பத்திரிகையாளர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்#

From around the web