கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் கடந்த சில நாடுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு
 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் கடந்த சில நாடுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் இதுகுறித்து கூறியபோது அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் நுரையீரலில் தொற்று அதிகரித்துள்ளதால், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய கொரோனா பரவும் நிலையில் சுகாதாரத்துறையின் முக்கியத்துவம் கருதி சத்யேந்திர ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதும், சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web