தகனம் செய்ய விறகில்லை: வனத்துறைக்கு கடிதம் எழுதும் டெல்லி முதல்வர்!

 
தகனம் செய்ய விறகில்லை: வனத்துறைக்கு கடிதம் எழுதும் டெல்லி முதல்வர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதும் நூற்றுக்கணக்கில் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஏற்கனவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ரெம்டெவிசிர் மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை போன்றவற்றால் டெல்லி மாநிலம் தத்தளித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்களை எரிக்க விறகுகள் பற்றாக்குறையால் டெல்லி திண்டாடி வருகிறது

firewoods

இது குறித்து வனத்துறைக்கு கடிதம் எழுதுமாறு டெல்லி மேயருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்ததாகவும் இதனை அடுத்து வனத்துறை மேயர் கடிதம் எழுதி அதிகமான விறகுகளை வரவழைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web