டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு! படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்!

டெல்லியில் கொரோனா அதிகரிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு!
 
டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு! படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு கொரோனா வைரஸ் தான். இந்த கொரோனா வைரஸ் முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இந்த கொரோனா வேகமாக பரவியது. மேலும் நொடிக்கு நொடி இந்த நோயானது அதிகரிக்க தொடங்கியது. மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். மேலும் கடந்த ஆண்டிலும் இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது.

corona

ஆனால் இந்திய அரசானது எந்த நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு திட்டத்தை மிகவும் தைரியத்துடன் அமல்படுத்தியது. இதனால் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா நோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும் இந்தியாவை கண்டு மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் முழு ஊரடங்கு சட்டத்தினை அமல்படுத்தினார். சில வாரங்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இந்தியாவில் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்குகளை மாநில அரசுகள் அறிவித்து இருந்தன. மேலும் டெல்லியிலும் சில விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.

அவர் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் அனைத்து பள்ளிகளும் காலவரையற்ற மூடப்படும் என்றும் கூறினார். மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளி  திறக்க வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.  தற்போது அவர் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா அதிகரிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

From around the web