தமிழகத்தின் இ பாஸ் பதிவுதளத்தில் "திருமணம்" என்ற பிரிவு நீக்கம்! காரணம் தவறாக பயன்படுத்துதல்!!

வெளியே செல்வதற்கான காரணங்களில் இருந்து திருமணம் என்ற பிரிவு சேர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் நீக்கப்பட்டது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது!
 
தமிழகத்தின் இ பாஸ் பதிவுதளத்தில் "திருமணம்" என்ற பிரிவு நீக்கம்! காரணம் தவறாக பயன்படுத்துதல்!!

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது/ அதுவும் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அத்தியாவசிய பொருட்கள் மளிகை சாமான்கள் வாங்குவதற்கு 12:00 மணிக்கு  அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது நேரம் காலை 10 மணி கடைகள் அடைக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது. இந்த காலகட்டத்தில் மக்கள் பலரும் பொது ஊடகம் என்று எண்ணாமல் சுற்றித் திரிகின்றனர் மேலும்  போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.marriage

கொரோனா பற்றி கண்டு கொள்ளாமல் சென்னையில் வாகனங்களில் சுற்றித் இருப்பவர்களிடம் போலீசார் விசாரணையில் மேற்கொள்கின்றனர். மேலும் அண்ணா சாலையில் முழு ஊர் அடங்கிலும் வழக்கம்போல் வாகனங்களில் சுற்றி அவர்களை பிடித்து விசாரணை செய்கின்றனர். மேலும் இ பதிவு செய்யாமல் காலை 10 மணிக்கு மேல் வெளியே பைக் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுகிறது. மேலும் பதிவு செய்யாமல் வெளியே சுற்றுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு முக்கிய சந்திப்புகளில் தீவிரமாக நடைபெறுகிறது. இன்னும் தமிழக அரசின் இ பதிவு தளத்தில் திருமணம் என்ற பதிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளதால் குழப்பம் எழுந்துள்ளது. மேலும் வெளியூர்  வருவதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதாக அரசு கூறியிருந்தது. மேலும் திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பித்து வெளியூர் சென்றதாலும் நீக்கம் என கூறப்பட்டிருக்கிறது.

From around the web