பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் என தகவல்

 

இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்பட இருப்பதாகவும் அதற்கான கவுண்டன் தொடங்கிவிட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

பிஎஸ்எல்வி சி 49 என்ற ரக ராக்கெட் அதில் மூன்று நாடுகளை சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள் உள்ளன என்பதும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட பல செயற்கைக்கோள்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று 03.02க்கு சரியாக விண்ணில் ஏவ இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் 10 நிமிடங்கள் தாமதமாக ஏவப்படுகிறது என தெரிகிறது. அதாவது 03.02 மணிக்கு பதிலாக 03.12 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது

வானிலையில் மாற்றம் நிலவுவதால் ராக்கெட் ஏவப்படுவதில் தாமதம் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ஆண்டில் முதல் ராக்கெட் இன்று ஏவப்படுகிறது என்பது பெருமைக்குரிய ஒரு விஷயம் ஆகும்.
 

From around the web