ஸ்டார் ஹோட்டலுக்குள் புகுந்த புள்ளிமான்: பெங்களூரில் பெரும் பரபரப்பு

பெங்களூரில் பிசியாக இயங்கி வந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்குள் திடீரென புள்ளி மான் ஒன்று துள்ளி குதித்து ஓடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெங்களூரில் காட்டில் இருந்து வழி தவறி ஊருக்குள் வந்து விட்ட புள்ளிமான் ஒன்று தெருக்களில் சுற்றி திரிந்தது. இந்த நிலையில் திடீரென அந்த மானை சில தெருநாய்கள் துரத்த ஆரம்பித்தன. நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக பயந்து ஓடிய அந்த புள்ளி மான் துள்ளிக் குதித்து அருகில் இருந்த ஸ்டார் ஹோட்டல்
 

ஸ்டார் ஹோட்டலுக்குள் புகுந்த புள்ளிமான்: பெங்களூரில் பெரும் பரபரப்பு

பெங்களூரில் பிசியாக இயங்கி வந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்குள் திடீரென புள்ளி மான் ஒன்று துள்ளி குதித்து ஓடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரில் காட்டில் இருந்து வழி தவறி ஊருக்குள் வந்து விட்ட புள்ளிமான் ஒன்று தெருக்களில் சுற்றி திரிந்தது. இந்த நிலையில் திடீரென அந்த மானை சில தெருநாய்கள் துரத்த ஆரம்பித்தன. நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக பயந்து ஓடிய அந்த புள்ளி மான் துள்ளிக் குதித்து அருகில் இருந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் புகுந்தது. இதனால் ஹோட்டல் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. ஓட்டலுக்குள் மான் புகுந்தது குறித்து கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு ஓட்டல் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்த மானை பிடித்து மீண்டும் காட்டுக்குள் விட்டனர். இந்த சம்பவத்தால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web