குறைந்து வரும் கொரோனா: பொதுமக்கள் நிம்மதி!

 
corona

தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் ஒரு கட்டத்தில் அதாவது மே மாதம் 21 ஆம் தேதி 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் ஊரடங்கு மற்றும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 33 ஆயிரத்து 361 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

corona

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்த நிலையில் சென்னையிலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் அதற்கு பதிலாக கோவையில் அதிகமாகி வருவதை அடுத்து தற்போது தமிழக அரசு கோவையில் கொரோனாவை குறைப்பது குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் படிப்படியாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது

கடந்த மார்ச் 17ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:


மே 27: 33,361
மே 26: 33,764
மே 25: 34,285
மே 24: 34,867
மே 23: 35,483
மே 22: 35,873
மே 21: 36,184 (மிக அதிகம்)
மே 20: 35,579
மே 19: 34,875
மே 18: 33,059
மே 17: 33,075

From around the web