சென்னையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் குறையும் கொரோனா கேஸ்கள்: மருத்துவர்களுக்கே புரியாத ஆச்சரியம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டன. இதனை அடுத்து மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது, மால்கள் திறக்கப்பட்டன, ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களும் திறக்கப்பட்டன

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சென்னைக்கு திரும்பி இருப்பதாக கூறப்பட்டது

தளர்வுகள் அதிகரிக்கப்பட்டது மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வந்தது ஆகியவை காரணமாக சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக 965, 992, 968 என்ற அளவில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா கேஸ்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தினசரி சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றனர் என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மிகவும் குறைய தொடங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது

எனவே சென்னையில் உச்சத்தை தொட்டு விட்டு அதன் பின்னர் இறங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னையின் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கணித்தனர். ஆனால் மருத்துவர்களின் கணிப்புக்கு எதிராக சென்னையில் மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனா கேஸ்கள் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அண்டை மாநிலமான கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரோனா கேஸ்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகம் மற்றும் சென்னை மிக விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

From around the web