பாரதி பிறந்த நாளை "சாதி ஒழிப்பு" நாளாக அறிவியுங்கள்!!

பாரதி பிறந்த நாளை ஜாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை
 
bharathiyar

சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியாவில் அடக்குமுறை அதிகமாக காணப்பட்டது. மேலும் அதைவிட குறிப்பாக நம் இந்திய மக்களிடையே ஜாதி பற்றும் அதிகமாக காணப்பட்டது. அதற்கு வன்மையாக அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு கவிஞர்கள் புலவர்கள் தங்களது பாடல்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்களில் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிட்டவர் பாரதியார்.stalin

மேலும் இவர் எட்டயபுரத்தை சேர்ந்தவர்.இந்த நிலையில் இவரின் பிறந்த நாள் குறித்து தற்போது சில கோரிக்கைகள் வெளியாகியுள்ளது. அதன்படி சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கிய பாரதி பிறந்தநாளை ஜாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது, மேலும் தமிழக முதல்வருக்கு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு அலுவலகம், கல்வி நிலையங்களில் ஜாதி ஒழிப்பு நாளாக உறுதிமொழி எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும் அவரது நினைவு நாளான இன்றைய தினம் மகாகவி நாள் இன்று அனுசரிக்கப்படும் என்று மு க ஸ்டாலின் கூறியிருந்தார்.

From around the web