மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு! அவர் ஒரு "கர்ப்பிணிப் பெண்"

தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர்  கொரோனாவால்  உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
pergant

தற்போது நம் நாட்டில் அதிகமாகப் பேசப்படும் வார்த்தையாக கொரோனா வைரஸ் உள்ளது. கடந்தாண்டு இந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஆனது இந்நோய் மீண்டும் அதிகரித்து மக்களுக்கு மிகப்பெரிய சோகத்தை உருவாகியது. அதுவும் குறிப்பாக நம் தமிழகம் புதுச்சேரியில் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா வீரியமானது அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநில மக்கள் மிகுந்த அச்சத்துடன் மாநிலங்களில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.corona

இந்நிலையில் இந்த நோய்க்கு எதிராக களப்பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் என அனைவரும் மிகவும் போராடி வருகின்றனர். மேலும் அவ்வப்போது இத்தகைய போராட்ட வீரர்களுக்கும் இந்த கொரோனா நோயின் அறிகுறி கண்டறியப்பட்டு மட்டுமின்றி அவர்கள் ஒரு சில நேரத்திற்கு உயிரிழப்பதும் தமிழகத்தில் அவ்வப்போது நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பதைக்க வைக்கிறது.

அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த கர்ப்பிணி பெண் மருத்துவர் கார்த்திகா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இவர் திருவண்ணாமலையை சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் கார்த்திகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி கர்ப்பிணி மருத்துவர் கார்த்திகா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அத்துணை மருத்துவர்களையும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

From around the web