500 மாற்றுத்திறனாளிகளுக்கு 500 ரூபாய் தந்த தயாநிதிமாறன்!"ஒரு மாத மளிகை சாமான் ஃப்ரீ"!

சென்னையில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் தயாநிதி மாறன்!
 
dayanithi maran

தற்போது நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு ஆனது தற்போது வரை நடைமுறையில் உள்ளன. காரணம் என்னவெனில் நம் நாட்டில் வைரஸ் கிருமியான கொரோனா மீண்டும் எழுந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தற்போது இதனை பின்பற்றுகின்றனர். தமிழகத்தில்  இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன, மேலும் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவரே இரண்டு வார காலத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.sekar babu

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் பல பகுதியில் கட்டுப்பாடுகள் அதிதீவிரமாக காணப்படுகிறது இதனால் மக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு மிகவும் தயங்குகின்றனர். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் இந்த மாதம் 2000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

மேலும் நிவாரணப் பொருட்களும் ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. சம்பவம் தலைநகரமான சென்னையில் நடைபெற்றுள்ளது. அதன்படி சென்னையில் காலையில் போடப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டத்தில் தயாநிதி மாறன் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு 500 ரூபாய் வழங்கினார். மேலும் அவர்களுக்கு மஞ்சள், அரிசி போன்ற மளிகை சாமான் பொருள்களையும் ஒரு மாத காலத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்கியதாக கூறபடுகிறது. மேலும் இதில் அமைச்சர் சேகர்பாபு  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web