தோல்வி பயத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் தயாநிதி மாறன்!

திமுக மண்டலச் செயலாளர் தயாநிதி மாறன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார்!
 
தோல்வி பயத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் தயாநிதி மாறன்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சியையும், பாமக கட்சியையும் வைத்துள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி அந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

dayanithi

தமிழகத்தில் திமுக கட்சி காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது .கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திமுகவின் மண்டல செயலாளராக உள்ள தயாநிதிமாறன் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி கூறுகிறார்.

அவர் தோல்வி பயத்தால் முதல்வர் பழனிசாமி வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லுகிறார் என தயாநிதிமாறன் கூறுகிறார். மேலும் 4 1/2 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

From around the web