"விவசாயிகளுக்கு விடியல்"; விவசாயிகளோடு ஆலோசனை செய்யும் அமைச்சர்கள்!

டெல்டா விவசாயிகள் உடன் திமுக அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
"விவசாயிகளுக்கு விடியல்"; விவசாயிகளோடு ஆலோசனை செய்யும் அமைச்சர்கள்!

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிகழ்கிறது. மேலும் திமுக கட்சியின் சார்பில் முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரான திரு மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் அவர் தான் தேர்தல் அறிக்கையாக கூறியிருந்த ஒவ்வொன்றையும் தனது ஆட்சியின் தொடக்க முதலே மிகவும் திறம்பட செய்து வருகிறார். மேலும் அவருக்கு உதவி செய்யும் வண்ணமாக அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.durai murugan

அவர்களுள் குறிப்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்து மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறார். மேலும் பல அமைச்சர்களும் தங்களது பணியினை மிகவும் திறம்பட செய்து வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய திமுக அமைச்சர்கள் தற்போது விவசாயிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் துரைமுருகன்,கே என் நேரு உள்ளிட்டோர் டெல்டா மாவட்ட விவசாயிகள் உடன் ஆலோசனை செய்து வருவதாக கூறுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறுவை சாகுபடி குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். அமைச்சர்கள் மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை கொறடா கோவி செழியன் போன்றோரும் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக ஆட்சியில் அமைச்சர்களும் தங்களது பணியினை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர் என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது.

From around the web