ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் சென்னை காவல்துறை ஆணையரின் மகள்: குவியும் பாராட்டுகள் 

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனையடுத்து கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க தேவையான உபகரணங்களான செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாமல் பல மாணவர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது 

இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையரின் 17 வயது மகள் குனிஷா அகர்வால் என்பவர் ஆன்லைன் வகுப்புகளுக்கு உபகரணங்கள் இன்றி தவிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதற்காக அவர் ஒரு வெப்சைட்டை உருவாக்கி அந்த வெப்சைட்டில் தேவையான உபகரணங்களை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக அந்த உபகரணங்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

குனிஷா அகர்வாலுக்கு என்.ஆர்.ஐ ஒன்று உதவி செய்கிறது என்பதும் இதன் மூலம் தான் தேவையான உபகரணங்கள் ஆன்லைன் வகுப்புகள் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வரும் காவல்துறை ஆணையரின் 17 வயது மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web