தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை: திமுகவுக்கு செக்?

 

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாமல் தடுக்கும் ஒரே அமைப்பாக திமுக இருப்பதால் அந்த அமைப்பை அடக்கிவைக்க மத்தியில் உள்ள பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் திமுகவிற்கு செக் வைக்கும் விதமாக 2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

2ஜி சம்பந்தப்பட்ட வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கப்பட்டு இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் 2ஜி வழக்கின் மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது

எனவே இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தீர்ப்பும் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, இந்த தீர்ப்பு திமுகவுக்கு பாதகமாக இருந்தால் தமிழகத்தில் திமுகவின் கொட்டத்தை அடக்கலாம் என்று பாஜக முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகத்தை தற்போது நெட்டிசன்கள் பலர் எழுப்பி வருகின்றனர்

From around the web