பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட பிரத்யேக பயிற்சி பள்ளி: குவியும் இளம்பெண்கள்

 

பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிப்பதற்காகவே பிரத்தியேகப் பயிற்சி பள்ளி ஒன்று பெங்களூரில் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த பயிற்சி பள்ளியில் வந்து சைக்கிள் ஓட்ட பயிலும் இளம் பெண்களின் கூட்டம் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

 இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை ஏறிக் கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை விரைவில் ரூ.100ஐ தொடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இளம் பெண்கள் பலர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை மூலையில் வைத்துவிட்டு சைக்கிளை பயன்படுத்துவதை விரும்புகின்றனர் 

cycle school

இதனால் பணம் மிச்சமாவது மட்டுமின்றி உடல் நலமும் அதிகரிக்கும் என்றும் உடற்பயிற்சி செய்தது போலாகும் என்றும் இளம்பெண்கள் கூறி வருகின்றனர். இதனை அடுத்து பெரும்பாலான பெண்கள் சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வரும் நிலையில் இதற்கான பிரத்யேக சைக்கிள் ஓட்டும் பயிற்சி பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது 

பெங்களூரில் பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்கு பிரத்யேக பயிற்சி பள்ளி ஒன்றை இளம்பெண் ஒருவர் ஆரம்பித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சைக்கிள் ஓட்ட இளம் பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பாக நகர்ப்புற பெண்கள் அதிகம் சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web