கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் குற்றங்கள் குறைந்துள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஒரு அதிர்ச்சி கணக்கெடுப்பின்படி கொரோனா ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள் முன்பைவிட 350 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது உலக அளவில் ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரித்துள்ளதாக தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். இந்த குற்றங்களில் முக்கியமானது இந்த ஊரடங்கு காலத்தில் நோய்
 

கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் குற்றங்கள் குறைந்துள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஒரு அதிர்ச்சி கணக்கெடுப்பின்படி கொரோனா ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள் முன்பைவிட 350 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உலக அளவில் ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரித்துள்ளதாக தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். இந்த குற்றங்களில் முக்கியமானது இந்த ஊரடங்கு காலத்தில் நோய் சிகிச்சைக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியை திருடுவது தான் என்பது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலாகும்

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பெயர் மற்றும் முகவரியை திருடுவது, மருத்துவமனை தகவல்களை திருட முயற்சிப்பது ஆகியவை ஆகிய குற்றங்கள் அதிகமாக இருப்பதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் இணையம் மூலம் வெறுப்புணர்வை அதிகரிக்கவும் தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளதாகவும் அவர் பேட்டியளித்துள்ளார்

ஊரடங்கு காலத்தில் நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறைந்தாலும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web