ஊரடங்கு உபயோகிக்கும் காய்கறி வியாபாரிகள்! 10 ரூபாய்க்கு விற்றதை 40 ரூபாய்க்கு விற்கிறார்கள்!!

தமிழகத்தில் இன்று ஒரு நாள் ஊரடங்கு கிடையாது என்பதால் வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது!
 
vegetable

தமிழகத்தில் தற்போது வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கும்  அமலில் உள்ள நிலையில் இந்த ஊரடங்கும் நாளை முதல் கடுமையாக இருக்கும் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் எவ்வித ஊரடங்கும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் அத்தனை கடைகளும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன. இதனை லாபகரமாக பல காய்கறி வியாபாரிகள் உபயோகிக்கின்றனர். அந்தப்படி தமிழகத்தில் நேற்றைய தினம் வரை தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.koyambedu

இதனால் மக்கள் மிகவும் அதிர்ச்சி உள்ளன. மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க மக்கள் கோயம்பேடு சந்தையில் குவிந்துள்ளனர். மேலும் வெங்காயம் ஆனது நேற்றையதினம்  கிலோ 20 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று வெங்காயம் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கானது 25 ரூபாயில் இருந்து 80 ரூபாய் உயர்ந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதோடு மட்டுமின்றி ரூபாய் 50 லிருந்து கேரட் ரூபாய் 150 உயர்ந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதோடு மட்டுமின்றி கத்திரிக்காயும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்றைய தினம் கத்திரிக்காய் ஆனது 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் கத்திரிக்காய் ஆனது 160 ரூபாய்க்கு விற்பனையாகி மக்களை வேதனைப் படுத்துகிறது. இதனால் இந்த ஊரடங்கு காய்கறி வியாபாரிகள் மிகவும் லாபகரமாக எண்ணி இத்தகைய விலை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். ஆனால் தமிழக அரசின் சார்பில் இத்தகைய விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழைய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இந்த காய்கறிகளின் விலையானது குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஆயினும் இன்று இரவு 9 மணிக்கு அத்தனை கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் இவை எப்போது அமலுக்கு குறைவான விலையில் காய்கறிகளை வாங்குவது என்று மக்கள் திண்டாடுகின்றனர்.

From around the web