ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வேண்டிய நிலை வரும்: முதல்வர் எச்சரிக்கை 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விழாக்காலங்களில் உள்பட மற்ற அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிதலை கண்டிப்பாக பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதே போல் தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாகவும் கவனக்குறைவாக இருந்தால் மட்டுமே நிலைமை மோசமடையும் என்றும் அவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் பொது மக்கள் முக கவசம் மற்றும் தனிமனித இடைவேளையை பின்பற்றாமல் வீதிகளில் சுற்றித் திரிவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

From around the web