ஜூலை 12 வரை ஊரடங்கு: தளர்வுகள் என்ன? தடைகள் என்ன?

 
stalin

தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் மேலும் சில தளர்வுகள் அறிவித்துள்ளார் என்பதும் ஒரு சிலவற்றுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

எவை எவைக்கு அனுமதி 

* அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பதற்கு அனுமதி இருப்பினும் திருவிழாக்கள் நடத்த அனுமதி கிடையாது. 

* அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி 

* அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

* உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி 

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீதம் பேர் உட்கார்ந்து சாப்பிட அனுமதி

எவை எவைக்கு அனுமதி கிடையாது:

* மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்வதற்கு அனுமதி இல்லை 

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்து அனுமதி இல்லை 

* அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

* பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை

lockdown

lockdown

lockdown

lockdown

lockdown

lockdown

lockdown

lockdown

From around the web