ஊரடங்கு தளர்வு: பிரான்ஸில் உள்ள ஹோட்டல்களில் நிரம்பி வழியும் கூட்டம்!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 வது வாரம் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஒரு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது, கோவிட் குடும்பத்தின் முந்தைய வைரஸ் பண்புகளைக் கொண்டிருந்த இந்த வைரஸுக்கு கொரோனா அல்லது கோவிட் 19 எனப் பெயரிட்டனர். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரண வைரஸாகக் கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளாலும் இதுவரை மருந்து
 
ஊரடங்கு தளர்வு: பிரான்ஸில் உள்ள ஹோட்டல்களில் நிரம்பி வழியும் கூட்டம்!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 வது வாரம் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஒரு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது, கோவிட் குடும்பத்தின் முந்தைய வைரஸ் பண்புகளைக் கொண்டிருந்த இந்த வைரஸுக்கு கொரோனா அல்லது கோவிட் 19 எனப் பெயரிட்டனர்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரண வைரஸாகக் கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளாலும் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஊரடங்கு தளர்வு: பிரான்ஸில் உள்ள ஹோட்டல்களில் நிரம்பி வழியும் கூட்டம்!!

இதுவரை உலகம் முழுவதிலும் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், மாற்று மருந்துகளான நோய் எதிர்ப்பு சக்தியினைத் தூண்டும் மருந்துகளைக் கொண்டும், ஆரோக்கியமான உணவுகளின்மூலமும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், சானிட்டசைர் பயன்படுத்துதல் போன்ற பல வழிமுறைகளின் மூலம் கொரோனாவானது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அவற்றில் மிக முக்கியானது ஊரடங்கு, ஆம் ஏறக்குறைய 3 மாதங்களாக ஊரடங்கானது அமலில் இருந்த நிலையில் பிரான்ஸில் உணவகங்கள் இயங்க அரசு அனுமதி அளிக்க கூட்டம் அலைமோதியது.

வழக்கமாக நண்பகலில் திறக்கப்படும் உணவகங்கள், பல மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படுவதால்  நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டே மக்கள் சாப்பிட ஆர்வம் காட்டினர்.

உலக சுகாதார மையம் கொரோனாத் தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பிரான்ஸ் 7 வது இடத்தினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web