அண்டை மாநிலத்தில் மீண்டும் இன்றுமுதல் ஊரடங்கு: முதல்வர் உத்தரவு

 

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் சுமார் 5000 பேர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் 6000, 7000 என பாதிப்பு இருந்த நிலையில் நேற்று முன்தினம் 8000 பாதிப்பு என இருந்தது

இந்த நிலையில் நேற்று 9 ஆயிரத்து 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளதை கண்டு கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 78,000 என உயர்ந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 20 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி இன்று காலை 9 மணி முதல் மே மாதம் இறுதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது 

கேரளாவை அடுத்து மேலும் சில இடங்களில் கொரோனா அதிகமாக இருக்கும் இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web