மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் ஊரடங்கு அமல்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது என்பதும் இதனால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 

corona

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 5000 பேர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள அமராவதி மற்றும் யவத்மல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது 

மேலும் தொற்று நோய் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்றும், பொதுமக்கள் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட சுகாதார விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலை ஏற்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

From around the web