சட்டமன்றத் தேர்தலுக்கு பின் ஊரடங்கா?நம்பாதீர்கள்! ராதா கிருஷ்ணன்!

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் பல ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

radha krishnan

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கிறார் சத்யபிரதா சாகு. அவர் பல தகவல்களை வெளியிட்டார். மேலும் தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பாக மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது.

 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் மிகவும் பதட்டத்துடன் உள்ளனர். மேலும் மக்கள் மத்தியில் தேர்தலுக்குப்பின் ஊரடங்கு என நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவல் சில தினங்களாக வைரலாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்  கூறினார், அவர் தேர்தலுக்குப்பின் ஊரடங்கு  வதந்தியை நம்ப வேண்டாம் எனக் கூறினார். மேலும் காய்ச்சல் வந்தால் தள்ளிப்போடாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஊரடங்கு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web