புரட்டாசி மாதம் முடிவடைந்த அடுத்த நாளே அசைவ கடைகளில் குவிந்த கூட்டம்: பரபரப்பு தகவல் 

 

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வருவார்கள் என்பது தெரிந்ததே. அதனால் சிக்கன் மட்டன் முட்டை உள்பட அசைவ உணவு பொருட்கள் மிகவும் மந்தமான விற்பனையாக இருந்தது 

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாதம் முடிவடைந்து இன்று ஐப்பசி மாதம் தொடங்கியதை அடுத்து முதல் நாளே அசைவை கடைகளில் பெரும் கூட்டம் கூடி உள்ளது. அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் அசைவு கடைகளின் முன் குவிந்துள்ளனர் குறிப்பாக சிக்கன் மட்டன் கடைகளில் நீண்ட வரிசையில் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று குவிந்து உள்ளனர் என்பதும் தனிமனித இடைவெளியை கூட கடைப்பிடிக்காமல் பலரும் மீன்கள் வாங்குவதற்கு முண்டியடித்து வருகின்றனர் என்பதும் தெரிகிறது 

ஒரு மாதம் மிகவும் கட்டுப்படுத்தி அசைவம் சாப்பிடாமல் இருந்த பொதுமக்கள் இன்று அந்த தடை நீங்கியதை அடுத்து அசைவு கடைகளில் குவிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web