"எங்கள விமர்சிப்பதற்கு பதிலா உங்க தலைவர்களை விமர்சியுங்கள்"-கனிமொழி!

தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எம்பி கனிமொழி கூறியுள்ளார்!
 
"எங்கள விமர்சிப்பதற்கு பதிலா உங்க தலைவர்களை விமர்சியுங்கள்"-கனிமொழி!

தற்போது தமிழகத்தில் புதிய அரசு புதிய ஆட்சி என்ற நிலை நிலவுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் முதன்முறையாக முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் பத்து ஆண்டுக்கு பின்னர் உதயசூரியன் சின்னம் ஆனது உதித்துள்ளது என்றே கூறலாம். மேலும் பெரும்பான்மையை பிடித்து தமிழகத்தில் ஆட்சியை தன்வசம் ஆக்கிக் கொண்டது திமுக. மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் தேர்தலுக்காக கூடியிருந்த அத்தனை வாக்குறுதிகளையும் வரிசையாக நிறைவேற்றி வருகிறார்.bjp

அவருக்கு உதவியாக அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் புதிதாக பல துறைகளுக்கு அமைச்சர்களையும் நியமித்து உள்ளார் முகஸ்டாலின். இந்நிலையில் இவரை ஆட்சியை குறித்து பலரும் பலவிதமாக கூறுகின்றனர். ஆனால் பாஜகவினர்  இவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் விமர்சிக்கும் பாஜகவினருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வண்ணமாக திமுகவின் எம்பியான கனிமொழி கூறியுள்ளார்.

அதன்படி தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விமர்சித்தால் நாடு என்றே காப்பாற்றப் பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்றும் இந்நேரம் மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம் என்றும்  எம்பி கனிமொழி கூறியுள்ளார்.இதனால் பாஜகவினர் இதன்மூலம் தமிழக அரசின் ஆட்சியையும் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சியையும் விமர்சிப்பது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web