புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் தனித்துப் போட்டி!

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக உள்ள அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களுடன் தேசிய கட்சிகளான பாஜக கட்சி இணையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட்டணி வைத்துள்ளது.

cpm

தற்போது அக்கட்சியுடன் கூட்டணி தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் வெளியிடப்பட்டன. மேலும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. அங்கும் தமிழகத்தில் எதிர்கட்சி கூட்டணியான திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி புதுச்சேரியிலும் உள்ளது என தகவல் வெளியானது. மேலும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் சிபிஎம் என்று அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது கட்சியானது தனித்து போட்டியிடுவதாக தகவல்.

 மேலும் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் சிபிஎம் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும் தகவல் வெளியானது. மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கபடாததால் மார்க்சிஸ்ட் கட்சி மிகவும் அதிருப்தி என்றும் கூறப்படுகிறது. மேலும் முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சரவணன் போட்டியிடுகிறார் என்றும் அக்கட்சி தரப்பு கூறுகிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு ஆறு தொகுதிகள் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் மிகவும் பரபரப்பாக உள்ள கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் புதுச்சேரி கூட்டணியில் சிபிஎம் கட்சி தனித்துப் போட்டி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

From around the web