சிறையில் உள்ள குளியலறையில் ரகசிய கேமராக்கள்: பெண் அரசியல்வாதி குற்றச்சாட்டு 
 

 

சிறையில் இருந்தபோது தன்னுடைய அறையிலும் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த குளியலறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீப் பெரும் பெரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் ஷெரீப் கடந்த ஆண்டு சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் 

camera

இந்த நிலையில் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள மரியம் ஷெரீப் தனது சிறை அனுபவங்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது தான் இருந்த சிறையிலும், சிறை குளியலறைகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததாக குற்றம் சாட்டினார். 24 மணி நேரமும் தன்னை கண்காணிக்கவே இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது நவாஸ் ஷெரீப்பின் கட்சி வேலைகளில் மரியம் ஷெரிப் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web