கோவாக்சின்விலை குறைப்பு 600 லிருந்து 200 ரூபாய் குறைந்து 400க்கு  விற்பனை!

கோவாக்சின் தடுப்பூசி விலையானது மாநில அரசுகளுக்கு 200 ரூபாய் குறைந்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது!
 
கோவாக்சின்விலை குறைப்பு 600 லிருந்து 200 ரூபாய் குறைந்து 400க்கு விற்பனை!

தற்போது நாடெங்கும் கொரோனா அதிகமாக காணப்படுகிறது. இதனால் இதற்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு  கட்டுப்பாடுகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களுக்கு இரண்டு விதமான கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன மேலும் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை விட மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருவது கொரோனா தடுப்பூசியின் விலையாகும்.bharat biotech

இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்வலை அதிகம் இருந்தன. அதனால் நேற்றைய தினம் இந்தியசீரம்  நிறுவனமானது தாங்கள் உறுதி செய்யும் கோவிசில்டு தடுப்பூசியினை விலை குறைத்தனர். இந்நிலையில் தற்போது இந்திய சீரம் நிறுவனத்தை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனமும் தற்போது தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசியின் விலையினை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவா சீன் தடுப்பூசி விலையானது தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 அதன்படி முன்பதாக மாநில அரசுகளுக்கு தடுப்பூசி ஆனது 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்நிலையில் தற்போது 200 ரூபாய் விலை குறைந்து தற்போது 400 ரூபாய்க்கு அனைத்து மாநில அரசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அறிவித்திருந்த நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனியார் மருத்துவமனையில் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web