கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!


 

 

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகம் முழுவதும் தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த சரித்திரம் வாய்ந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

co operative

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் எட்டு வாரங்களில் பணி நிரந்தர உத்தரவு வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

இந்த உத்தரவை அடுத்து அனைத்து தற்காலிக பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கி அவர்கள் வாக்குகளை கவரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது

From around the web