மீண்டும் தமிழக ஆளுநர் மீது நீதிமன்றம் அதிருப்தி: பரபரப்பு தகவல்

 

சமீபத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு கையெழுத்திடாமல் தாமதம் செய்து வந்த தமிழக கவர்னருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆளுநர் அந்த மசோதாவில் சமீபத்தில் கையெழுத்திட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் 

இந்த நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தை அடுத்து பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருபவர் பேரறிவாளன். இவரது தரப்பில் கருணை மனு ஒன்று தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு தற்போது ஆளுநரின் முடிவுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறது

இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கருணை மனு விவகாரத்தில் ஆளுநர் ஏன் தாமதம் படுத்துகிறார் என்றும், பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் முடிவு எடுக்காததற்கு அதிருப்தி தெரிவிப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web