அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு அன்புமணிக்கு சாதகமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பாமகவிற்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது அன்புமணி மீதான ஊழல் வழக்கு தான். அதாவது அவர் 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது ஏற்பட்ட சிக்கல் தான் அது. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து கோடி கோடியாக லஞ்சம் வாங்கிவிட்டார் என்பது தான் அந்த வழக்கு. கடந்த
 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு அன்புமணிக்கு சாதகமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பாமகவிற்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது அன்புமணி மீதான ஊழல் வழக்கு தான்.

அதாவது அவர் 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது ஏற்பட்ட சிக்கல் தான் அது. 

அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து கோடி கோடியாக லஞ்சம் வாங்கிவிட்டார் என்பது தான் அந்த வழக்கு.

அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த விவகாரத்தில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் 2015ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரி ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அன்புமணி மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் தான் நேற்று ஒரு உத்தரவு வந்துள்ளது. அதன்படி 2015ம் ஆண்டு அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் அன்புமணி மிக்க மகிழ்ச்சியில் உள்ளார்.

From around the web