எங்கும் ஊழல் எதிலும் ஊழல்!இறந்தவர்களின் உடலில் மாற்றம் உறவினர்கள் அதிர்ச்சி!

கடலூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால்  உறவினர்கள் அதிர்ச்சி!
 
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்!இறந்தவர்களின் உடலில் மாற்றம் உறவினர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் தற்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை தலைவிரித்தாடுகிறது. எங்கு சென்றாலும் பணம் எங்கு சென்றாலும் லஞ்சம் என்ற நிலைமையானது தற்போது தமிழகத்தில் இயல்பு நிலையாக மாறிவிட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து சில தினங்கள் முன்பாக கருத்து தெரிவித்திருந்தனர்.  தற்போது இறந்தவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.

corona

ஆனால் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்டுப்பாட்டு விதிகளையும் தடைகளை விதித்திருந்தது. அதன்படி பொது மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் போன்றவற்றை விதித்திருந்தது. மேலும் இந்த விதிமுறைகள் ஆனது ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் முன்னதாக அறிவித்திருந்தது. தற்போது  கொரோனா பாதிக்கப்பட்டவரின் இறந்தவரின் உடல் மாற்றி உடைக்கப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவமானது கடலூர் அரசு மருத்துவமனையில் அரங்கேறிய தாக  உள்ளது. மேலும் கொரோனா இறந்தவரின் உடலுக்கு பதில் வேறு ஒரு நபரின் உடல் ஒப்படைக்கப்பட்டது உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலை தவறாக மாற்றி ஒப்படைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் மருத்துவமனையின் இணை இயக்குனர் தற்போது கூறியுள்ளார். உறவினர்கள் அடையாளம் கண்ட பிறகே இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் இறந்தவரின் உடலை தவறுதலாக ஒப்படைத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இணை இயக்குனர் ரமேஷ் கூறியுள்ளார்.

From around the web