மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை:இன்று மற்றும் நாளை மூடப்படும்!

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை மூடப்பட்டதாக கூறப்படுகிறது!
 
மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை:இன்று மற்றும் நாளை மூடப்படும்!

மக்கள் மத்தியில் தற்போது உயிர்க்கொல்லி நோயாக வலம் வந்து காணப்படுகிறது கொரோனா வைரஸ். மக்களுக்கு பல்வேறு இன்னல்களையும் பல்வேறு கஷ்டங்களையும் கொடுக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. மேலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பாராமல் அனைவருக்கும் வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஆட்கொல்லி நோயான கொரோனா கடந்த ஆண்டில் இந்தியாவின் பெரும் முயற்சியினால் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் இரண்டாவது அலையாக இந்தியா முழுவதும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

corona

மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு  தீவிரமாக அமல்படுத்தி நடைபெறுகின்றன.மேலும் டெல்லி போன்ற ஒருசில மாநிலங்களில் நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அம்மாநில அரசு ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு  அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் சார்பிலும் சில தினங்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது  என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் சார்பில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும்  இந்த கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் பல மாநிலங்களில் கொரோனா நோய்க்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது மகப்பேறு மருத்துவமனை ஒன்று மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஈரோடு காந்தி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை தற்போது மூடப்படுகிறது.

மேலும் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு கொரோனா உறுதியானதால் இன்று மற்றும் நாளையும் மருத்துவமனை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுடன் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web