தேர்தல் ஆணையத்தினை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கட்டுப்பாடு உத்தரவு!

சென்னையில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு கொரோனா சோதனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது!
 
தேர்தல் ஆணையத்தினை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கட்டுப்பாடு உத்தரவு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்டுப்பாடுகளுடன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று முன்னர் அறிவித்துள்ளன. ஆனால் தற்போது தமிழகத்தின் சூழ்நிலையை தலைகீழாக உள்ளது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  எண்ணப்படும் தேதி மாற்றப்படும்  என அனைவரும் எதிர்பார்த்தனர்.corona

 தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ தேர்தல் எண்ணப்படும் தேதியில் மாற்றம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அதற்கான கட்டுப்பாட்டு விதிகள் உடனும் எண்ணப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.ஆயினும் இன்று காலை தேர்தல் ஆணையம் ஆனது குறிப்பிடத்தக்க தகவல்களை வெளியிட்டது. அதன்படி வேட்பாளர்கள் முகவர்களுக்கும் கொரோனா   பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. எண்ணப்படும்  மையங்களை சுற்றி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது மாநகராட்சி ஆணையரும் பல்வேறு சிறப்பு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு கொரோனா  சோதனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக சோதனை செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் சோதனை செய்யாதவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மையங்களில் செய்யலாம் எனவும் கூறியுள்ளார். வேட்பாளர்கள் மற்றும் முகவரிகள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதியத்துக்குள் செல்ல அனுமதி என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web