கொரோனா வைரஸ் எதிரொலி: ஹோலி பண்டிகையில் வித்தியாசம்

ஹோலி பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஹோலி பண்டிகையை கொண்டாட மத்திய மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி வண்ணப் பொடிகளை தூவுவதற்கு பதிலாக சிறு சிறு குழுக்களாக இருந்து வண்ணப் பொடிகளை தூவிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் வண்ணப் பொடிகளுக்கு பதிலாக வண்ண மலர்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பஞ்சாப்
 
கொரோனா வைரஸ் எதிரொலி: ஹோலி பண்டிகையில் வித்தியாசம்

ஹோலி பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஹோலி பண்டிகையை கொண்டாட மத்திய மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி வண்ணப் பொடிகளை தூவுவதற்கு பதிலாக சிறு சிறு குழுக்களாக இருந்து வண்ணப் பொடிகளை தூவிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் வண்ணப் பொடிகளுக்கு பதிலாக வண்ண மலர்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வண்ண வண்ண மலர்களை பொது மக்கள் ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்

இருப்பினும் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஆகிய பகுதிகளில் வண்ணப் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கொரோனா வைரசின் தாக்கம் ஹோலி பண்டிகைகளையும் விட்டுவைக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web