இந்தியாவிலும் சீனாவிலும் பரிசோதனையினை அதிகரித்தால் கொரோனா பாதிப்பும் அதிகமாக இருக்கும்… ட்ரம்ப் பேச்சு!!

இந்தியாவிலும் சீனாவிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையினை அதிகரித்தால் அமெரிக்காவினைவிட அதிக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “கொரோனாத் தொற்று உலக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது, உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவில் உள்ள கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது அதிகம் எனத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவிலோ அல்லது
 
இந்தியாவிலும் சீனாவிலும் பரிசோதனையினை அதிகரித்தால் கொரோனா பாதிப்பும் அதிகமாக இருக்கும்… ட்ரம்ப் பேச்சு!!

இந்தியாவிலும் சீனாவிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையினை அதிகரித்தால் அமெரிக்காவினைவிட அதிக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “கொரோனாத் தொற்று உலக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது, உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவில் உள்ள கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது அதிகம் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால் அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவிலோ அல்லது இந்தியாவிலோ கொரோனா பரிசோதனை குறைந்த அளவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் சீனாவிலும் பரிசோதனையினை அதிகரித்தால் கொரோனா பாதிப்பும் அதிகமாக இருக்கும்… ட்ரம்ப் பேச்சு!!

அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளும்போது உண்மையான தொற்றுகளின் எண்ணிக்கை வெளிப்பட்டு, தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.  அதைவிடுத்து பரிசோதனை அளவினைக் குறைத்தால், கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோரின் உண்மை நிலவரங்கள் தெரியாமல் போவதோடு தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் முக்கியமாகும்.

மேலும் சீனா துவக்கத்தில் கொரோனா வைரஸ் உருவானபோதே, உலக சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி நிச்சயம் அது சீனாவோடு தடுத்திருக்க வேண்டிய விஷயமாகும்” என்று கூறியுள்ளார்.

From around the web