மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்!
 
மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா பாதிப்பு!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை இருந்தது ஆனால் தற்போது மாறி எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமைக்கு உலகம் முழுவதும் செல்லப்பட்டுள்ளன. இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா முதன்முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனாநோயின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா கண்டத்திலுள்ள இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் இந்நோய் வர தொடங்கியது.

corona

ஆனால் இந்திய அரசு எந்த ஒரு நாடும்  கையிலெடுக்க தயங்கிய முழு ஒரு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டின் இறுதியில் நோயின் தாக்கம் ஆனது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்நிலையில் சில வாரங்களாக இந்தியாவில் இந்நோய் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற போதும் வேட்பாளர் சிலருக்கு கொரோனா ,மேலும் தேர்தல் முடிந்த பின்னரும் துரைமுருகன் உட்பட ஒரு சில வேட்பாளருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.

மத்திய அமைச்சர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்காரு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறிகுறி இல்லாமல் கொரோனா ஏற்பட்டதை அடுத்து அமைச்சர் சந்தோஷ் கங்வார் தனிமைப் படுத்திக் கொண்டார். ஏற்கனவே நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது குறிப்பிடத்தக்கது.

From around the web